கட்டாரிடம் கடன் வசதி கேட்டது இலங்கை !!
பெற்றோலியம் மற்றும் எரிவாயு விநியோகத்துக்கான சாத்தியமான கடன் இணைப்பு வசதி பற்றி, அபிவிருத்திக்கான கட்டார் நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ள பதிவில் மேற்குறிப்பிட்ட விடயத் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவப் பொருட்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கடன் வசதிக்கான கோரிக்கையை பரிசீலித்து சர்வதேச நாணய நிதிய திட்டத்துக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கட்டார் எரிசக்தி துறையின் உதவியோடு இலங்கையின் எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க அந்நாட்டின் எரிசக்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சரும், கட்டார் எரிசக்தியின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஷாட் ஷெரிடா அல் காபியையும் அமைச்சர் இன்று மாலை சந்தித்திருந்தார்.
சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் மற்றும் அமைச்சர் காஞ்சன ஆகியோர் நேற்றிரவு கட்டாருக்கு விஜயம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.