சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மற்றும் MRI ஸ்கேன் வசதி வட பகுதி மக்களுக்கு தற்போது இலகுவாகிறது!!
சிறுநீரக உபாதையினால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை எதிர்நோக்கி இருக்கும் நோயாளர்களின் நலன்கருதி றாகம மெல்ஸ்டா வைத்தியசாலை குழுமம் தற்பொழுது குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையினை செயற்படுத்துவதற்கு முன்வந்துள்ளது.
கொழும்பு வைத்தியசாலைகளிலே முப்பது இலட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை செய்துகொள்ளவேண்டிய நிலையில், மெல்ஸ்டா வைத்தியசாலை இன்று மக்களுக்குள்ள கஷ்ட நிலையை புரிந்து கொண்டு கட்டணத்தை குறைத்து வட பகுதி பொது மக்களுக்கு பல சலுகையின் அடிப்படையில் இச் சத்திர சிகிச்சையை வழங்க எண்ணியுள்ளது.
விஷேட சத்திர சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்களை உள்ளடக்கிய குழாம் வெற்றிகரமாக மெல்ஸ்டா வைத்தியசாலையிலே 100% வெற்றியுடன் அதே சமயத்தில் பராமரிப்புத்தரத்தில் 1% கூட குறையாமல் பல சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைகளை செய்துள்ளார்கள். மெல்ஸ்டா வைத்தியசாலையிலே இந்தச் சிகிச்சையைப் பெறுவதற்கு ஜனாதிபதி நிதி உதவியும் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது இதனால் நோயாளிகள், குறைந்த அளவிலே தமது பணத்தைச் செலவழிக்க வேண்டி வருகிறது. ஜப்பானிலிருந்து தருவிக்கப்பட்ட உலகத்தரத்திற்கு இணையான இரத்த சுத்திகரிப்பு கருவிகள் (dialysis machines) மற்றும் சிங்கப்பூர் நாட்டில் பயிற்றுவிக்கப்பட்ட தாதிகளை உள்ளடக்கிய மெல்ஸ்டா இரத்த சுத்திகரிப்பு நிலையம், (Melsta dialysis center) இலங்கையிலேயே குறைவான விலையிலே பொது மக்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சேவையினை வழங்கிவருகிறது.
மெல்ஸ்டா வைத்தியசாலையின் நிருவாக இயக்குனர்/பிரதம நிறைவேற்று அதிகாரி Dr .தியாகராஜா இறைவன் மெல்ஸ்டா வைத்தியசாலையின் யாழ் பிரவேசம் பற்றிக் குறிப்பிடுகையில் ”யாழ்ப்பாணத்தில் பிறந்து யாழ்ப்பாணத்திலேயே வளர்ந்த நான், இன்று எனது மக்களுக்கு குறிப்பாக சிறுநீரக நோயினால் கஷ்ட்டப்படுபவர்களுக்கு மெல்ஸ்டா வைத்தியசாலையின் மூலமாக இந்தச் சேவையை வழங்கவிருப்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன். தமிழ் மக்கள், தென் பகுதி வைத்தியசாலைகளுக்கு செல்லும் பொழுது மொழி பிரச்சனையினாலும் பணப்பிரச்சனையினாலும் படுகின்ற கஷ்டங்களை உணர்ந்து தமிழ் பேசும் ஊழியர்கள் அடங்கிய வைத்தியசாலையில் எமது மக்கள் நல்ல சேவையினை பெற்றுக்கொள்ள முடியும். யாழில் இருந்து வருபவர்களுக்கு வைத்தியசாலைக்கு நேர் எதிரே தங்குமிடவசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெல்ஸ்டா வைத்தியசாலை, சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் தமது வாகனத்திலேயே நோயாளிகளை வட பகுதியில் தமது வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து விடவும் எண்ணியுளார்கள். இச்சேவை பொது மக்களால் மிகவும் வரவேற்கப்படும் என்று எண்ணுகின்றேன். சிறுநீரக சத்திர சிகிச்சை சேவையுடன் மெல்ஸ்டா வைத்தியசாலை, வட பகுதி மக்களுக்கு MRI ஸ்கேன் சேவையினையும் துரிதகதியில் செய்ய எண்ணியுள்ளது. இரவு ரயில் சேவையிலோ, பேருந்து சேவையிலோ, றாகம மெல்ஸ்டா வைத்தியலைக்கு வந்தால் எதுவித தாமதமும் இன்றி MRI ஸ்கேன் பரிசோதனையை செய்து கொண்டு வைத்தியசாலைக்கு 50 மீட்டர் தொலைவில் இருக்கும் றாகம ரயில் நிலையத்தின் ஊடாக அதே நாளில் யாழ்ப்பாணம் திரும்ப முடியும். ”
மெல்ஸ்டா வைத்தியசாலை, யாழ்ப்பாணத்தில் இல.85 மணிக்கூட்டு வீதியில் இயங்குகின்ற ”லாவா” வைத்தியசாலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதுடன் நோயாளிகள் இவ் வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு மெல்ஸ்டா வைத்தியசாலைக்கு வருவதற்குரிய ஆயத்தங்களை செய்துகொள்ள முடியும். அதே சமயத்தில் நோயாளிகள் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளவதற்காக 077-7522226 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு யாழ்ப்பாணத்திலேயே இருக்கின்ற வைத்தியசாலை பிரதிநிதியுடன் கலந்து ஆலோசித்து மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
மெல்ஸ்டா வைத்தியசாலை, கொழும்பில் இயங்கிவரும் மெல்ஸ்டாகோர்ப் பி எல் சி (Melstacorp PLC) நிறுவனத்தின் முழுமையான உரித்துடைய நிறுவனம் ஆகும். திரு. ஹரி ஜெயவர்தனவின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்ற மெல்ஸ்டாகோர்ப் பி எல் சி ஆனது தொலைத்தொடர்பு, சுற்றுலா விடுதிகள், மின் சக்தி கைத்தறி, தேயிலைத்தோட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கியடதுடன் Melsta Labs, Melsta Pharmacy, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கே உரித்தான Joseph Fraser Memorial Hospital ஆகியவற்றை நிருவகித்து வருகிறது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”