இலங்கையின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!!
இலங்கையின் ஏற்றுமதிகள் இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பதிவு செய்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்க திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி 2022 மே மாதத்தில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியின் வருமானம் 980.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக (9.9%) அதிகரித்துள்ளது.
இதில் முக்கியமாக ஆடை கைத்தொழில், பலசரக்கு பொருட்கள், தென்னை சார்ந்த உற்பத்திகள், அலங்கார மீன் மற்றும் மின்சார உபகரணங்களின் ஏற்றுமதி அதிகரித்து ஏற்றுமதி வருமானமும் அதிகரித்துள்ளது. இந்த பொருட்களில் அதிக அளவில் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் தைத்த ஆடை மற்றும் புடவை ஏற்றுமதி 30.1% மாக அதிகரித்துள்ளது. இது 482.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.