BOI வில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசா சலுகைகள்!!
இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கு 5 வருட வேலை விசாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் இது அமலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு இந்த விசாக்கள் கிடைக்கப்பெறும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா குறிப்பிட்டுள்ளார்.