மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு..!!
மணிப்பூர் மாநிலம் நோனி மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். துபுல் ரெயில் நிலையம் அருகே இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. இதுவரை 13 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ராணுவம், அசாம் ரைபிள்ஸ் குழுவினர் முழு வீச்சில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், மணிப்பூர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் உயிருடன் புதைந்துள்ளதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மணிப்பூர் நிலச்சரிவு சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், முதல் மந்திரி பிரேன் சிங்கிடம் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளுக்கு மத்திய அரசு அனைத்துவித உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என தெரிவித்தார். மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வரும் மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், அதிகாரிகளுடன் அவரச ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.