h nbஇலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடல் அட்டைகள் மீட்பு!!
இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 480 கிலோ கடல் அட்டைகள் தமிழகத்தில் உள்ள மண்டபம் முகாம் அருகே நேற்று (30) மாலை மீட்கப்பட்டுள்ளது.
மண்டபம் அருகே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 480 கிலோ எடை கொண்ட கடல் அட்டையை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையில் சர்வதேச மதிப்பு 50 இலட்சம் இருக்கும் என வனத்துறை தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”