குறுகிய காலத்திற்குள் நெருக்கடி நிலைமைகள் குறையும்: பிரதமர் !!
நாடு எதிர்கொள்ளப்போகும் கடினமான மூன்று வாரகாலத்திலேயே இப்போது நாம் பயணித்துக்கொண்டுள்ளோம். அடுத்த குறுகிய காலத்திற்குள் நெருக்கடி நிலைமைகள் குறையும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலைமையிலும், விரைவாக எரிபொருளை பெற்றுக்கொள்வது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம், அதேபோல் சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாக எம்மாலும் துரிதமாக செயற்பட முடியாதுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது இலங்கையில் 11,000 மெற்றிக் தொன் டீசல், 7,000 மெற்றிக் தொன் பெற்றோல் மற்றும் 30,000 மெற்றிக் தொன் ஏனைய எரிபொருள் எண்ணெய் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.