கந்தக்காடு விரையும் மனித உரிமைகள் ஆணைக்குழு !!
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை மேற்கொள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக் குழுவொன்று இன்று(01) அங்கு செல்லவுள்ளது.
அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும், மோதல் சம்பவம் தொடர்பிலும், விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் அதிகளவானவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
பின்னர், 653 பேர் மீளவும் பொறுப்பேற்கப்பட்டதுடன், 70 பேர் தொடர்ந்தும் தேடப்படுகின்றனர்.