;
Athirady Tamil News

இந்தியாவின் இளம் வயது சபாநாயகர் என்ற பெருமையை பெற்றார் ராகுல் நர்வேகர்..!!

0

மகாராஷ்டிரா சட்டசபையில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க உள்ளது. இதற்காக இரண்டு நாட்கள் கொண்ட சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. -முதல் நாளான இன்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் நர்வேகருக்கு ஆதரவாக 164 வாக்குகளும், சால்விக்கு ஆதரவாக 107 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து புதிய சபாநாயகராக ராகுல் நர்வேக்கர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவும், துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும், நர்வேக்கரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். அப்போது பேசிய பட்னாவிஸ், ராகுல் நர்வேகர் மகாராஷ்டிராவிற்கு மட்டுமல்ல, இந்தியாவின் இளம் வயது சபாநாயகராக உள்ளார் என தெரிவித்தார். 45 வயதான நார்வேக்கரின் முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தார். பின்னர் அதில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் எம்எல்ஏவாக இருந்தவர். பின்னர் 2014 ஆம் ஆண்டில் சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் அவர் இணைந்தார். தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக அவர் உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழுத் தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ராகுல் நர்வேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.