சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பதவிகளும் கலைப்பு – அகிலேஷ் யாதவ் அதிரடி..!!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சியின் தேசிய தலைவர் பதவி தவிர, அதன் அனைத்து அமைப்புகளின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகள் உடனடியாக கலைக்கப்படுகிறது என தெரிவித்தார். இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டரில், சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ், கட்சியின் மாநிலத் தலைவர் தவிர, கட்சியின் தேசிய, மாநில மற்றும் மாவட்ட நிர்வாக அமைப்புகளை உடனடியாகக் கலைக்கப்படுகின்றன. தேசியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள், இளைஞர், மகளிர் அணிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சியின் மாவட்டத் தலைவர்களும் கலைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது. மேலும் 2024 பாராளுமன்ற தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.