யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இராணுவ சிற்றுண்டிச்சாலை திறக்கப்பட்டது.!!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணங்களினை மேற்கொள்கின்ற உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகளின் மற்றும் அங்கு பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களின் பயன்பாட்டுக்கும் தேவைப்பாடுகளிற்கும் பயன்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் சூழலில் இலங்கை இராணுவத்தின் 7 ஆவது பெண்கள் படையணியினால் புதிதாக அமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தரவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இதன் மூலமாக விமான நிலைய பணியாளர்கள் மற்றும் பயணிகளுக்கு தூய்மையான சுகாதார பாதுகாப்புக் கொண்ட உணவுகள் மற்றும் பானங்களும் சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”