’இலங்கையின் நிலைமை அனைவருக்கும் ஒரு பாடம்’
இலங்கையின் தற்போதைய கடன் நெருக்கடியானது, ஏனைய ஆசிய நாடுகளின் அரசாங்கங்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது எனவும் பொறுப்பான நிதிக் கொள்கையை சகலரும் பின்பற்ற வேண்டும், இல்லையேல் சர்வதேச நாணய நிதியத்தை கைகளில் சிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய தேசத்திடம் (இலங்கை) இறக்குமதிக்கு செலுத்த வேண்டிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் போய்விட்டது, இது அரசியல் ஸ்திரத்ததன்மையுடன் நாட்டைன் உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைக்கு வித்திட்டுள்ளது. நாடு தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்துவதை நிறுத்திவிட்டு, ஐ.எம்.எப் கடனுக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய பிரச்சினை என்னவென்றால், அதன் கடனாளிகளுக்கு பணம் செலுத்துவதற்கு மிகவும் குறைவான நாணய கையிருப்பே இலங்கையிடம் உள்ளது, இது முற்றிலும் மோசமான நாணய நிருவாகம் மற்றும் மோசமான முதலீட்டு கொள்கை என்பதன் விளைவு எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே சகலருக்கும் இலங்கையின் பாதையில் செல்வதற்கான சாத்தியக்கூறுகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். இது அனைவருக்கும் ஒரு பாடம் எனவும் அவர் கூறியுள்ளார்.