பொது மக்களிடம் இருந்து விலகும் மூன்று சக்கர நண்பன்?
தன்னிச்சையான கட்டண அறவீடு காரணமாக பொது மக்கள் முச்சக்கரவண்டி பாவனையில் இருந்து விலகி வருவதாக முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.
சில முச்சக்கரவண்டி சாரதிகள் மோசடியான முறையில் பொதுமக்களிடம் கட்டணங்களை அறவிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
முச்சக்கரவண்டி கட்டண அறவீடு தொடர்பில் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்க் கொண்டுள்ளனர். மக்கள் முச்சக்கரவண்டிகளை நிராகரிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். காரணம், எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத காரணத்தால் அதிக அளவில் முச்சக்கரவண்டி கட்டணங்களை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. முச்சக்கரவண்டி சாரதிகள் தன்னிச்சையாக மற்றும் மோசடியான முறையில் பயணிகளிடம் அதிக அளவில் பணம் அறவிடுவதை தவிர்க்க வேண்டும். முச்சக்கரவண்டி மானி வாசிப்புக்கு ஏற்றவாறு கட்டணங்களை அறவிட வேண்டும். தமக்கு அசௌகரியம் காணப்பட்ட போதும் உரிய கட்டணத்தை மாத்திரமே அறவிட வேண்டும். மோசடியாளர்களுக்கு இடமளிக்க வேண்டாம். இந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறானவர்கள் தலை தூக்குகின்றனர். இந்த தொழில் துறையை நாசமாக்குகின்றனர்.