வௌிநாடு செல்ல எதிர்ப்பார்ப்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது, சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் கணிசமான அளவு பணத்தை அனுப்பியுள்ளவர்களுக்கு மாத்திரம் மீண்டும் வெளிநாடு செல்லக்கூடிய வகையில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டில் வேலைகளுக்காக வெளிநாடு செல்லும் யுவதிகளுக்கு விமான டிக்கெட் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.