மன்னார் திருக்கேதீச்சரம் திருக்கேதீஸ்வரர் கும்பாபிஷேகம்!! (வீடியோ, படங்கள்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள திருக்கேதீச்சரம் கோவில் குடமுழுக்கு இன்று ஜீலை 6 காலை நடைபெற்றது.
பழமையான இக்கோவில் திருஞானசம்பந்தர், சுந்தரரால் தேவாரப்பாடல்கள் பெற்றது. ராஜராஜன், குலோத்துங்க சோழர்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மூர்த்தி, தலம், தலவிருட்சம், தீர்த்தம் என சிறப்பினைக் கொண்ட தலமாக விளங்குகின்றது.
சிவபெருமான் புவனபதியாக எழுந்தருளியுள்ள உத்திர கைலாயத்திற்கு நிகராக விளங்கும் தட்சிண கைலாயங்கள் என்று அழைக்கப்படுவது திருச்சிராப்பள்ளி, திருகோணேச்சரம், திருக்கேதீச்சரம் ஆகிய முப்பெரும் தலங்களாகும். இதில் கௌரியம்மை சமேத திருக்கேதீச்சர பெருமான் திருக்கோயில் இலங்கை மன்னார் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில் கேது பகவானால் பூஜீக்கப்பட்டு அருள் பெற்ற தலமாக விளங்குகின்றது.
சிறப்பு வாய்ந்த இக்கோவில் ஈழத்தமிழர்களின் முயற்சியால் கருங்கல் திருப்பணியில் புதுப்பிக்கப்பட்டது. மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் 108 சிவாச்சாரியார்கள் இதில் பங்கேற்கின்றனர்.
துஷ்யந்தன்.உ
மன்னார் திருக்கேதீச்சரம் திருக்கேதீஸ்வரர் கும்பாபிஷேகம் ஜீலை 6 ..!! (படங்கள்)