‘காஸ்’ சனி வந்தால் ஞாயிறு விநியோகம் !!
நாட்டில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாடானது இம்மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் முடிவுக்கு வரும் என சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எஞ்சியுள்ள நான்கு மாத காலங்களுக்கு எரிவாயுவை தட்டுப்பாடின்றி வழங்க முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு பிரச்சனை தொடர்பில் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வாய்மூல வினாவுக்கு பதில் அளித்து உரையாற்றும் போது ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
திட்டமிட்டபடி காஸ் தொகை ஒன்பதாம் திகதி கிடைத்தால், 11ஆம் திகதி அளவில் நாடு முழுவதிலும் காஸை விநியோகிக்க முடியும் என தெரிவித்தார்.
11, 12ஆம் திகதிகளில் கொழும்பு நகரம் முழுவதிலும் காஸ் விநியோகிக்க முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். 12.5 கிலோ காஸ் நிறுயுடைய ஒரு இலட்சத்து 40 ஆயிரம் சிலிண்டர்களை கொழும்பில் உள்ள 140 நிலையங்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் நாடு முழுவதிலும் ஒரு லட்சத்து 11 ஆயிரம் சிலிண்டர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.