ஐஸ் போதைப்பொருளை கடத்த முயன்றவர் யாழ்.நகரில் கைது!!
யாழ்ப்பாணம் மாநகரில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் கொண்டு சென்ற ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர் மானிப்பாய் வீதி சத்திரச்சந்திக்கு அண்மையில் வைத்து இன்று மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்பாணம் குருநகர் ஐந்துமாடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டார்.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”