நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?
டேட்டா சேவைகளை முடக்குமாறு தொலைத்தொடர்பாடல் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அரச தரப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், தமது பிரதான வருமானமீட்டும் பிரிவாக டேட்டா பிரிவு காணப்படுவதால் தற்போதைய சூழலில் அந்த வருமானத்தை இழக்கும் நிலையில் தாம் இல்லை எனத் தெரிவித்து குறித்த நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இந்தத் தீர்மானத்தை அரச தரப்பு கைவிட்டுள்ளதாக அறிந்து கொள்ள முடிந்தது.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் அறிக்கை வெளியிட்டிருந்ததை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அந்த செய்தியை பார்வையிட இங்கே அழுத்தவும்.
இந்நிலையில், போராட்டத்தை தடுக்கும் அதில் இடம்பெறக்கூடிய சம்பவங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பரவுவதை தவிர்ப்பதற்காகவும் நாளைய தினம் (9) டேட்டா சேவைகளை ஏதேனும் வழியில் முடக்கக்கூடிய முயற்சிகளை அரச தரப்பினால் மேற்கொள்ளப்படலாம்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)