சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது!!
நாளை (09) காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை கொழும்பு மாநகரில் தொலைபேசி சேவையை, அழைப்புச்சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக வௌியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
எந்தவொரு வகையிலும் சேவையை மட்டுப்படுத்துமாறு அறிவித்து தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு கடிதம் அனுப்பப்படவில்லை என அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி தம்மிடம் கேட்டறிந்ததாகவும் தாம் தௌிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எந்தவொரு வகையிலும் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாதென இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)