;
Athirady Tamil News

போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

0

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் எனவும், போராட்டங்களை நிதானமாக பொலிஸார் கையாள வேண்டும் எனவும், வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் உறுதிப்படுத்துமாறும் இலங்கை அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்களிடமும், ஆதரவாளர்களிடமும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுமாறும், அத்தியாவசிய மருத்துவ அல்லது மனிதாபிமான சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கவும் அறிக்கையிடவும் உரிமை உண்டு. எனவே இவற்றை செயல்படுத்துவதில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று பாதுகாப்புப் படையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் இராணுவப்படைகள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், தங்களைத் தாங்களே தாக்கிக் கொள்ளும் நிகழ்வுகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கையாள்வதில் வன்முறையைத் தவிர்க்கவும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவும் அரசாங்கம் காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

பொது விதியாக, பொலிஸாரை பயன்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது. விதிவிலக்கான சூழ்நிலைகளில், இராணுவம் சட்ட அமலாக்க செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, அவர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு கட்டுப்பட்டு, சிவில் அதிகாரிகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து சிவில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கை மக்கள் ஏற்கனவே பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதுடன், உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமைகள் உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்ற நிச்சயமற்ற நிலையில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறந்த வாழ்க்கை, பொருளாதார மற்றும் சமூக நெநெருக்கடிகளை தீர்க்க அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு.அதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு !!!

வழமைபோன்று இ.போ.ச பஸ் சேவைகள் !!

புகையிரத சேவை இடைநிறுத்தம் !!

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது!!

பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.