“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)
இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ள நிலையில், அதிபர் கோட்டாபய ராஜபக்ச கப்பலில் ஏறித் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி முடிந்ததாகத் தெரியவில்லை. தொடர்ந்து அங்குப் பல மாதங்களாகப் போராட்டம் தொடர்கிறது.
அந்நாட்டின் சாதாரண பொதுமக்கள் தொடங்கி பணக்காரர்கள் வரை அனைவரும் இந்த பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை
உள் நாட்டுப் போர் முதல் பல்வேறு காரணங்கள் இதற்குச் சொல்லப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், மின்சாரம் மட்டுமின்றி உணவு மற்றும் மருத்துவ பொருட்களுக்கும் கூட கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமை இந்தளவுக்கு மோசமாகச் செல்ல ஆளும் ராஜபக்ச தரப்பு தான் காரணம் என்பதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்றுகை
மக்கள் போராட்டத்திற்கு அஞ்சி பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கேவும் நிலைமையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், எதற்கும் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் இன்று மக்கள் போராட்டம் கட்டுக்கடங்காமல் சென்றுவிட்டது. இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு, கைப்பற்றினர்.
உளவுத்துறை ரிப்போர்ட்
இந்தச் சூழலில் மக்கள் போராட்டம் குறித்து உளவுத் துறை அளித்த ரிப்போர்ட்டின் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே மக்கள் போராட்டம் தீவிரமாக நடந்து வந்த நிலையில், போராட்டம் கையை மீறிச் செல்ல வாய்ப்பு உள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின்னர் கோத்தபய ராஜபக்ச நேற்று இரவே ராணுவத் தலைமையகத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கோரிக்கை
இதற்கிடையே மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால், அதிபர் கோத்தபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 16 எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிபர் பதவி காலம் முடியும் வரை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய கோத்தபய ராஜபக்ச, இப்போது கப்பல் மூலம் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
அவசர ஆலோசனை
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. அதிபர் மாளிகையில் நடைபெறும் போராட்டத்தின் படத்தைப் பார்த்தாலே இது புரியும். இந்தச் சூழலில் நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்கள் போராட்டம் தீவிரமாக நடைபெறுகிறது. அதிபர் மாளிகையில் நடைபெறும் போராட்டத்தின் படத்தைப் பார்த்தாலேயே இது புரியும். இந்தச் சூழலில் நிலைமையைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்க இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)
போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)
தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)