போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)
இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள், அங்குள்ள நீச்சல் குளத்தில் இறங்கி குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இலங்கை அதிபர் மாளிகையை இன்று கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சவின் உடமைகளைச் சூறையாடினர்.
அதிபர் மாளிகையின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளனர். மேலும், அதிபர் இல்ல வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
இலங்கை மக்கள் புரட்சி
கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் இலங்கை மக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ளனர். மக்கள் புரட்சியால் கடந்த மே மாதம் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் இன்னும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை.
மக்கள் போராட்டம்
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் இன்று பேரணி நடத்துகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகை அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் திரண்டனர்.
அதிபர் மாளிகை முற்றுகை
போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் உள்ளே நுழைய முற்பட்ட நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் விரட்டியடிக்க முயன்றனர். போராட்டக்காரர்கள் தனது இல்லத்தை சூழ்வதை அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிபர் மாளிகையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நீச்சல் குளத்தில்
இதையடுத்து, அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் கோத்தபய ராஜபக்சவின் உடமைகளை சூறையாடினர். அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து போராட்டக்காரர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் போராட்டக்காரர்கள் குளிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)
போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)
தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)