நாடே கொந்தளிப்பு.. இலங்கை-ஆஸி டெஸ்ட் போட்டி.. மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் – பதற்றம்! (வீடியோ படங்கள்)
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் குதித்துள்ள போராட்டக்காரர்கள், காலே கிரிக்கெட் மைதானத்திற்குள் புகுந்துள்ளனர்.
ஆஸ்திரேலியா – இலங்கை அணிக்களுக்கிடையில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் காலே கிரிக்கெட் மைதானத்தை சுற்றி போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை – ஆஸ்திரேலியா போட்டி நடைபெறும் காலே மைதானத்துக்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
மக்கள் புரட்சி
இலங்கையின் பொருளாதாரத்தைச் சீரழித்த இலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தலைநகர் கொழும்புவில் மக்கள் போராட்டம் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் ட்ரக்குகளில் கிளம்பிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொழும்பு நகரில் குவிந்துள்ளனர்.
தடுப்புகளை மீறி
பாதுகாப்புப் படையினர் தடுப்பு வேலிகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்ற நிலையில், அந்த தடைகளை தகர்த்து போராட்டக்காரர்கள் முன்னேறியுள்ளனர். இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள கோத்தபய ராஜபக்சவின் அதிபர் மாளிகைக்கு அருகிலுள்ள ராணுவத் தடுப்புகளை மீறி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.
ராணுவ பாதுகாப்பில்
போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று தனது அதிகாரபூர்வ இல்லத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச ராணுவ முகாமில் அவர்களது பாதுகாப்பில் குடும்பத்துடன் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் போட்டி
இதற்கிடையே, இலங்கை -ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று காலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போராட்டக்காரர்கள் காலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள்ளும் நுழைந்துள்ளனர்.
மைதானத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள்
இலங்கை அதிபருக்கு எதிரான பதாகைகள், சுவரொட்டிகளுடன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், கோட்டை சுவர் வழியாக கொழும்பு மைதானத்திற்குள் புகுந்துள்ளனர். தொடர்ந்து அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனால், கொழும்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)
போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)
தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)