ஆள விடுங்க சாமி! மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. கவிழும் இலங்கை அரசு!! (வீடியோ படங்கள்)
இலங்கையில் அரசுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், மேலும் 2 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியானது.
மக்கள் போராட்டம்
இதனால் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. அரசு பொருளாதாரத்தை முறையாக கையாளவில்லை என்றும், தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாகக்கூறி அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி பொதுமக்கள் இலங்கையின் முக்கிய நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
மகிந்தா ராஜினாமா
நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ஷே கடந்த மே 9 ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமறைவானார். பொதுமக்கள் ராஜபக்ஷேவின் வீடுகள், அவரது பெற்றோரின் கல்லரைகள், சொத்துக்களை தீக்கிரையாக்கினர். இதனை தொடர்ந்து இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார்.
பசில் ராஜபக்ஷே ராஜினாமா
ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவியேற்றும் இலங்கையின் நிலை மோசமடைந்துகொண்டே சென்றது. இதனால் அடுத்த பிரதமராகவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார் பசில் ராஜபக்ஷே. ஜூன் மாதம் மக்கள் புரட்சி வேகமெடுத்து பசில் ராஜபக்ஷே குறிவைக்கப்பட்டார். அழுத்தம் தாங்க முடியாமல் ஜூன் 9 ஆம் தேதி அமைச்சர் பதவியிலிருந்தே பசில் ராஜினாமா செய்தார்.
அதிபர் மாளிகை முற்றுகை
இந்த நிலையில் ஜூலை 9 ஆம் தேதியான இன்று அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவுக்கு எதிரான போராட்டங்களும் வீரியமடைந்து அதிபர் மாளிகை மற்றும் அதிபரின் செயலகத்திற்கு பொதுமக்கள் புகுந்தனர். அனைத்து கட்சித் தலைவர்களின் பரிந்துரையை ஏற்று பதவியிலிருந்து விலகுவதாக ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். அவரது வீடும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. அதிபர் கோட்டாபய ராஜபக்ஷேவும் 13 ஆம் தேதி ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார்.
அமைச்சர்கள் ராஜினாமா
முன்னதாக மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து இலங்கை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த பந்துலா குணவர்த்தனா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அத்துடன் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியிலிருந்தும் அவர் விலகினார். இந்த நிலையில் அந்நாட்டு அமைச்சர்கள் ஹரின் ஃபெர்னாண்டோ மற்றும் மனுஷா நானயக்காரா ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)
தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள் !! (வீடியோ)
அதிபர் மாளிகை மட்டுமில்ல.. ஊடகங்களுக்கும் குறி! அட்டாக் மோடில் இலங்கை மக்கள்!! (வீடியோ, படங்கள்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)
போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)
தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)