;
Athirady Tamil News

இந்தியாவில் 4-வது நாளாக, 18 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு..!!

0

நாடு முழுவதும் மேலும் 18,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்தது. கடந்த 7-ந் தேதி பாதிப்பு 18,930, மறுநாள் 18,815, நேற்று 18,840 ஆக இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் 18 ஆயிரம் பேருக்கு மேல் தொற்று உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 3,186, மேற்கு வங்கத்தில் 2,968, மகாராஷ்ராவில் 2,760, தமிழ்நாட்டில் 2,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 22 ஆயிரத்து 651 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 14,553 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 68 ஆயிரத்து 533 ஆக உயர்ந்தது. தற்போது 1,28,690 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,662 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் 24 பேர் உள்பட மேலும் 42 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,25,428 ஆக அதிகரித்தது. இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 198 கோடியே 76 லட்சமாக உயர்ந்தது. இதில் நேற்று 10,21,164 டோஸ்கள் அடங்கும். இதற்கிடையே நேற்று 4,32,777 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.66 கோடியாக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.