யாழ் ராணி சேவை ஆரம்பம்!! (படங்கள்)
யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி யாழ்.ராணியின் ரயில்
சேவை காங்கேசன்துறையிலிருந்து காலை 06 மணிக்கு புறப்படும் புகையிரதம் காலை 8.11க்கு முறிகண்டியை அடையும்.
அங்கிருந்து மீண்டும், காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்படும் புகையிரதம் காலை 11.20க்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு
காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் புகையிரதம் மாலை 4.10க்கு முறிகண்டியை வந்தடையும்.
முறிகண்டியிலிருந்து மீண்டும் 4.40க்கு புறப்படும் இந்தப் புகையிரதம் இரவு 7.20க்கு காங்கேசன்துறையை சென்றடையும்.
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக 90 ரூபாய் கட்டணமும் யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”