;
Athirady Tamil News

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தேசிய சின்னத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!!

0

புதிய பாராளுமன்ற கட்டிடம் மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம் ரூ.971 கோடி செலவில் அதிநவீன வசதியுடன் அமைகிறது. எதிர்காலத்தில் இரு அவைகளையும் விரிவாக்கம் செய்ய வசதியாக மக்களவையில் 888 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 384 உறுப்பினர்களும் அமரத்தக்க வகையில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டிடத்தின் பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் 1,224 உறுப்பினர்கள் பங்கேற்க முடியும். பாராளுமன்ற கட்டிடத்தில் இந்திய ஜனநாயகத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டுகிற வகையில் பெரிய அரங்கம் ஒன்று அரசியல் சாசன அரங்கம் என்ற பெயரில் அமையும். நூலகம், கட்சி அலுவலகங்கள், பல்வேறு நிலைக்குழு அலுவலகங்கள், உணவு உண்ணும் அரங்குகள், வாகன நிறுத்துமிடங்கள் என அளவில்லா வசதிகளைக் கொண்டிருக்கும். இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று காலை 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் உருவான தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி உள்பட பலர் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.