வவுனியாவில் 33வது வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு!! (வீடியோ, படங்கள்)
வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் 33வது வீரமக்கள் தினம் இன்று 13-07-2022 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு கோவில்குளம் உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் புளொட் அமைப்பின், வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான யூலை 13ம் திகதி முதல் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர், கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான யூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகத்தின் போராளிகள், தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது.
அந்தவகையில் இன்று தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு வீரமக்கள் தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
விடுதலைப்போரில் மரிணித்தவர்களை நினைவு கூர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அமிர்தலிங்கத்தின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வானது எதிர்வரும் யூலை 16 ஆம் திகதிவரை நடைபெறும்.
இன்றைய ஆரம்ப நிகழ்வில், கட்சியின் உபதலைவரும், முன்னாள் நகரபிதாவுமான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.காண்டீபன், கட்சியின் நிர்வாக செயலாளர் பத்மநாதன் (பற்றிக்), கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களான த.யோகராஜா (யோகன்), குகதாசன் (குகன்) மற்றும் கழகத்தோழர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”