;
Athirady Tamil News

மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: அனைத்து பள்ளிகளையும் 24-ந்தேதி வரை மூட உத்தரவு..!!

0

மணிப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளையும் வருகிற 24ந்தேதி வரை மூடும்படி அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுபற்றி மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்புகள் அதிகரித்து மற்றும் மணிப்பூரில் தொற்று விகிதம் 15 சதவீதத்திற்கும் கூடுதலாக உயர்ந்து வரும் சூழலில், அனைத்து பள்ளிகளும் வருகிற 24-ந்தேதி வரை தொடர்ந்து மூடப்படுகிறது என தெரிவித்து உள்ளது. மணிப்பூரில் கடந்த திங்கட்கிழமை 47 பேருக்கும், நேற்று (செவ்வாய் கிழமை) 59 பேருக்கும் கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 15 கேர் குணமடைந்து சென்றுள்ளனர் என மணிப்பூர் சுகாதார சேவை இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. இதனால், மணிப்பூரில் மொத்த பாதிப்பு 66,135 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,264 ஆகவும் உள்ளது. மொத்தம் 2,120 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று விகிதம் 15.6 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.