மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)
மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அந்நாட்டு அதிபர் மாளிகையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தலைநகர் மாலேவில் வசிக்கும் இலங்கை மக்களும் கோத்தபாய ராஜபக்சேவை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் கோத்தபாய ராஜபக்சே. அத்துடன் ராஜினாமா கடிதத்திலும் கையெழுத்திட்டார் கோத்தபாய.
தப்பி ஓடிய கோத்தபாய
இதனையடுத்து பொதுமக்களால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கருதி, இலங்கையைவிட்டே தப்பி ஓட முடிவு செய்தார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் கோத்தபாய ராஜபக்சேவுக்கு அகதியாக கூட அடைக்கலம் தர அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வரவில்லை. கோத்தபாயவின் தம்பி பசில் ராஜபக்சே, விமான நிலையத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
மாலத்தீவில் தஞ்சம்
இதனால் இன்று அதிகாலை ஒருவழியாக இலங்கையைவிட்டு விமான படை விமானத்தில் மாலத்தீவு நாட்டுக்குள் அகதியாக தஞ்சமடைந்தார் கோத்தபாய ராஜப்கசே. மாலத்தீவு சபாநாயகரும் முன்னாள் அதிபருமான நஷீத், கோத்தபாயவை தமது வாகனத்தில் அழைத்துச் சென்றார். இலங்கையைவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனாதிபதி தப்பி ஓடியது இதுவே முதல் முறையாகும். இலங்கையைவிட்டு கோத்தபாய தப்பி ஓடிவிட்டதை இலங்கை விமானப் படை, பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளன.
மாலத்தீவில் போராட்டம்
இதனிடையே கோத்தபாய ராஜபக்சேவுக்கு அகதியாக பாதுகாப்பு வழங்கக் கூடாது என்கிற எதிர்ப்பு குரல்கள் மாலத்தீவில் வலுத்துள்ளன. இலங்கை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு கோத்தபாய ராஜபக்சேவை மாலத்தீவை விட்டே வெளியேற்ற வேண்டும்; மாலத்தீவு- இலங்கை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் மாலத்தீவு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல் தலைநகர் மாலேவில் வசிக்கும் இலங்கை மக்களும், கோத்தபாயவை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
அன்று மகிந்த
ஏற்கனவே இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இலங்கையில் கடற்படையிடம் தஞ்சமடைந்திருந்தார். அங்கிருந்து கப்பல் மூலமாக மாலத்தீவுக்கு தப்பி ஓடினார். மாலத்தீவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் மகிந்த பதுங்கி இருந்துவிட்டு இலங்கைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !!
பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !!
எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ)
விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை!! (வீடியோ)
ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!
ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்!!
தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது !! (வீடியோ)
ஆள விடுங்க சாமி! மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. கவிழும் இலங்கை அரசு!! (வீடியோ படங்கள்)
ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)
தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள் !! (வீடியோ)
அதிபர் மாளிகை மட்டுமில்ல.. ஊடகங்களுக்கும் குறி! அட்டாக் மோடில் இலங்கை மக்கள்!! (வீடியோ, படங்கள்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)
போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)
ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)
தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)