;
Athirady Tamil News

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு!! (படங்கள்)

0

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயற்சித்த மக்களை கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

முன்னதாக இலங்கையின் பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முழுவதுமாக கைப்பற்றினர்.

பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்த மக்கள் மகிழ்ச்சியில் செல்ஃபி எடுத்து கொண்டனர். பின்னர் ரணில் மற்றும் கோட்டபய ராஜபக்ஷவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர் என்கிறார் கொழும்பில் உள்ள பிபிசி செய்தியாளர் டேசா வாங்.

இரண்டாம் மாடியில், பிரதமர் அலுவலகம் என்று எழுதி வைக்கப்பட்டிருந்த பலகைக்கு மேலே போராட்டக்காரர்கள் இலங்கையின் கொடியை ஏந்தி நின்றனர்.

போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு பயன்படுத்தப்பட்டது இருப்பினும் பாதுகாப்புப் படையினரை மீறி போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகம் உள்ளே நுழைந்தனர்.

முன்னதாக திங்கள்கிழமையன்று பிரதமர் அலுவலகத்தில் அமைச்சரவை உறுப்பினர்களுடன் பிரதமர் சந்திப்பு நடத்தினார் என்றும் அனைத்துக் கட்சி ஆட்சி அமைக்க உடன்பாடு ஏற்பட்டவுடன் அந்த அரசிடம் பொறுப்புகளை ஒப்படைப்போம் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களும் கருத்து தெரிவித்தனர் என்றும் பிரதமர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பொறுப்பு ஜனாதிபதியும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணீர்ப் புகை குண்டு வீச்சு.

பிரதமர் அலுவலகம் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்தார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு தப்பி மாலத்தீவு சென்றுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அவர் பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 37.1ன் கீழ் இந்த நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தம்மிடம் கூறியதாக அபேவர்த்தன கூறியுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.

‘போ’ரணி.

பிரதமர் அலுவலக வாயிலுக்குள் நுழைய முயன்றவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி பின்னுக்குத் தள்ளியதாக அங்கிருந்த பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நேரத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக்கு எதிரான முகக் கவசம் அணிந்திருக்கவில்லை. அவர்கள் சாதாரண முகக் கவசமே அணிந்திருந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 9ஆம் நடந்த போராட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லம் போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதையடுத்து தலைமறைவான கோட்டாபய புதன்கிழமை அதிகாலை விமானம் மூலம் மாலத்தீவு தலைநகர் மாலே சென்று தரையிறங்கியதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு

இந்நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வலியுறுத்தி, இன்று காலை போராட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. காலி முகத்திடல் போராட்டக் களத்திலிருந்து பேரணியாக கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள பிரதமர் அலுவலகம் வரை போராட்டக்காரர்கள் சென்றனர். பிறகு போராட்டக்காரர்கள், பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தனர். அப்போது போலீசார் கண்ணீர்ப் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகத்தை நடத்தினர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.

இந்நிலையில், ரணில் நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்திருப்பது அவர் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை செயல்படுத்தியதன் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

வட்டமிடும் ஹெலிகாப்டர்.

நாடுமுழுவதும், அவசர நிலையும், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், போராட்டத்தை தாங்கள் கைவிடப்போவதில்லை என்று காலிமுகத் திடலில் உள்ள போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

அமைதியாக கூடிப் போராட்டம் நடத்தி வரும் மக்களின் தலைக்கு மேலே ராணுவ ஹெலிகாப்டரை பறக்கவிடுவது, இந்த ஆட்சிக்கு எதிரான அமைதியான போராட்டத்தை இவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை என்பதைத் தெளிவாக காட்டுகிறது என்று பிபிசியிடம் கூறினார் காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விராகா பெரீரா.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி !!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம்; ’ரணிலின் கேம்’ !!

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!!

மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!!

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!

பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)

மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !!

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video)

மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!

ஏமாற்றினார் மஹிந்த !!

’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’ !!

பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!!

சடசடவென துப்பாக்கிச் சூடு !!

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!!

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !!

அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதி நியமிக்கவில்லை: மஹிந்த !!

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!

இந்தியா மறுத்தது !!

பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது !!

கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம் !!

விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!

பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !!

கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!

கோட்டா தப்பியோட முயன்றாரா?

எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ)

ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம் !!

பிரதமர் பதவியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது !!

பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம் !!

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!

விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை!! (வீடியோ)

கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு !!

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில் !!!

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு பலிக்குமா?

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!

கோட்டா தொடர்பான கதையை மறுத்தார் மஹிந்த !!

ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்!!

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!!

ஹெல்மட்டை வீசிய அதிகாரி ஆயுதத்துடன் கைது !!

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு : 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு !!

வெளிநாட்டில் இருக்கிறார் கோட்டா !!

முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ரணில்!! (வீடியோ)

கட்சித் தலைவர்கள் அதிரடி தீர்மானம் !!

கோட்டாவின் செய்திகளை மஹிந்த வெளியிடுவார் !!

சுமந்திரன் பிரதமரானல் வரவேற்பேன் – க.வி.விக்னேஸ்வரன்!!

அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்!!!

ஜனாதிபதியாக சஜித்?

இன்று தீர்மானம் மிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

இலங்கையில் இந்திய படையினர்: இந்தியா மறுப்பு !!

பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

ராஜபக்ஷவினர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் – சுப்பிரமணியன் சுவாமி!!

மைத்திரி முன்வைத்துள்ள 10 யோசனைகள் !!

ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!!

கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!

உறுதுணையாக இந்தியா தொடர்ந்து செயற்படும் !!

தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)

CID வசமாகும் விசாரணைகள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது !! (வீடியோ)

எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்!! (வீடியோ)

ஜனாதிபதி அதிரடி பணிப்பு !! (வீடியோ)

பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது !! (வீடியோ)

சவேந்திர சில்வாவின் கோரிக்கை !! (வீடியோ)

ஆள விடுங்க சாமி! மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. கவிழும் இலங்கை அரசு!! (வீடியோ படங்கள்)

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)

ராஜபக்ஷக்களை துரத்தும் 9 ஆம் இலக்கம் !! (வீடியோ)

தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள் !! (வீடியோ)

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா!! (வீடியோ)

புதனன்று விலகுகிறார் கோட்டா !! (வீடியோ)

சபாநாயகர் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பு!! (வீடியோ)

“ரணில்” வீடு முன் ரணகளம்.. பிரதமர் பதவி விலகியும் விடாத இலங்கை மக்கள் – தொடரும் போராட்டம்!! (வீடியோ படங்கள்)

வெகுண்டெழுந்த இலங்கை மக்கள்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைப்பு – பெரும் பதற்றம்!! (வீடியோ படங்கள்)

வன்முறை தீர்வாகாது: சுமந்திரன் கண்டனம் !! (வீடியோ)

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு!! (வீடியோ)

பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை !! (வீடியோ)

இனி என்னவாகும் இலங்கை.. அடுத்த அதிபர் “மகிந்தவா?” அனைத்துக் கட்சிகள் எடுத்த 4 முக்கிய முடிவுகள்!! (வீடியோ படங்கள்)

அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷே பதவி விலகனும்.. இலங்கை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!! (வீடியோ படங்கள்)

அதிபர் மாளிகை மட்டுமில்ல.. ஊடகங்களுக்கும் குறி! அட்டாக் மோடில் இலங்கை மக்கள்!! (வீடியோ, படங்கள்)

கோட்டாவுக்கு 24 மணி நேரம் காலக்கெடு !! (வீடியோ)

பிரதமர் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!! (வீடியோ)

பந்துல குணவர்தன இராஜினாமா !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையில் இராப்போசனம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!! (வீடியோ)

அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா? (வீடியோ)

நாடே கொந்தளிப்பு.. இலங்கை-ஆஸி டெஸ்ட் போட்டி.. மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் – பதற்றம்! (வீடியோ படங்கள்)

போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)

“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)

42 பேர் காயம்: மூவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள் பறந்தன!! (வீடியோ)

​அவசர அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில் !! (வீடியோ, படங்கள்)

இருவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

கோட்டா தப்பியோட்டமா? (வீடியோ)

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல் !!! (வீடியோ)

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)

அவசர செய்தி: 23 பேர் காயம்!! (வீடியோ)

கோட்டையில் துப்பாக்கிச் சூடு !!

ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)

கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு !!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.