;
Athirady Tamil News

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு!! (படங்கள்)

0

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தால் வருடாந்தம் நடாத்தப்படும்
ட்டின் ஏழாவது மாநாடு இன்று ஜூலை 14ஆம் திகதி, வியாழக்கிழமை, முற்பகல் 9.00 மணி முதல் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

“புதிய இயல்பில் மீள்தன்மைக்காக வணிகத்தை மாற்றுதல்” ( Transforming Business for Resilience in New Normal )” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த இவ் ஆய்வு மாநாட்டில் ஆஸ்திரேலியாவின் சதேர்ண் குறொஸ் பல்கலைக் கழக ( Southern Cross University) தகவல் அமைப்புகள் முறைமைப் பேராசிரியர் தர்சனா செடெரா நிகழ்நிலை வாயிலாக முதன்மை உரையாற்றினார்.

இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழகம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முன்னாள் துணைவேந்தர்களான பேராசிரியர் என். சண்முகலிங்கன், வாழ் நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை, பீடாதிபதிகள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்

கணக்கியல் மற்றும் நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி, முயற்சியாண்மையும் புதியன புனைதலும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், மனித வள முகாமைத்துவம் மற்றும் நிறுவன கற்கைகள், கற்றல் கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகிய 07 உப பிரிவுகளின் கீழ் 43 ஆய்வுக் கட்டுரைகள் இவ் ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றுடன், மாணவர்களின் அறிவு மற்றும் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் ஆய்வு மாநாடும் (Student Research Symposium) இடம்பெற்றது. இம் மாநாட்டில் மாணவர்களால் 6 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.