இலங்கை தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கும் ஐ.எம்.எப். !!
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் நேற்று (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் மற்றம் சமூக நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானத்துடன் உள்ளது எனவும் விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் அதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து தங்களுக்கு மீளவும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிலைமை சீராக இல்லை எனவும் இந்த நிலையில் அது குறித்து உறுதிப்பாடு அவசியமாகும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.