வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பங்கேட்டில் தொடரும் ஊழல் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச அதிகாரிகள்!! (படங்கள்)
வவுனியா மாவட்டத்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. இதே வேளை மாவட்ட செயலகத்தினால் முறைப்படுத்தப்படும் எரிபொருள் பங்கேட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதிலும் சரியான தீர்வு ஏற்படவில்லை எனவே விசனம் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் வழங்குவதை முறையாக கண்காணிக்கும் பொருட்டு மாவட்ட செயலகத்தினால் எரிபொருள் பங்கேடு தொடர்பிலான செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த செயலியின் ஊடாக எரிபொருள் பெற்றுக் கொள்ளும் வாகனங்கள் பதிவு செய்யப்படுவதுடன் மீண்டும் அந்த வாகனங்கள் அடுத்த வாரமே எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியும் என கூறப்பட்டது. எனினும் ஒரு வாகனம் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை எரிபொருள் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து இதுவரை எழுத்துப்பூர்வமான சரியான ஆவணங்கள் எதுவும் மாவட்ட செயலகத்தினால் வெளியிடப்படவில்லை.
குறித்த செயலில் பதிவு செய்யப்பட்ட வாகனமானது மீண்டும் அடுத்த வாரம் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என கூறப்பட்ட போதிலும் குறித்த ஒரு வாகனமானது ஒரு வாரத்திற்குள் மூன்று முறை எரிபொருள் பெற்றுக் கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது . இது தொடர்பில் பொது மக்களால் விளக்கம் கோரப்பட்டபோது கடமையில் இருந்த உத்தியோகத்தர்கள் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை என பொதுமக்கள் வசனம் தெரிவித்தனர்
. இதே வேளை கடமையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்கள் எல்லா வாகனங்களையும் சரியான முறையில் செயலியில் உள்வாங்கவில்லை எனவும், குறித்த விடயம் தொடர்பிலஅரசாங்க மற்றும் பிரதேச செயலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடைவேளை அடுத்த கட்டமாக குடும்ப அட்டையுடன் இணைத்து எரிபொருள் அட்டை வழங்கப்படும் என அரசாங்க அதிபர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனாலும் எரிபொருள் அட்டை விநியோகத்திலும் சரியான திட்டமிடல், கண்காணிப்பு முறைமை இல்லாவிடில் அங்கும் ஊழல் நடப்பதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்பதை பொதுமக்கள் சுட்டிக்காட்டியதோடு பொதுமக்களால் எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாத நிலை தொடரும் என கூறப்படுகின்றது எனவே அரசாங்க அதிபர் இவ்விடயம் தொடர்பில் மேலதிக கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.