;
Athirady Tamil News

குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்ந்தெடுக்கும் நிலை ஏற்படுமா? – அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? (படங்கள்)

0

இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி புதிய அதிபரைத் தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கிவிட்ட நிலையில், யார் அதிபராவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இலங்கையின் அரசியல் சட்டப்படி, தேர்தல் இல்லாமல் நாடாளுமன்றம்தான் புதிய அதிபரைத் தேர்வு செய்யப்போகிறது. ஆனால் அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்ற தெளிவான முடிவு கிடைக்காத நிலையில், குலுக்கல் முறையில் அதிபரைத் தேர்வு செய்யும் சூழல் ஏற்படும்.

அதிபர் பதவிக்கான வேட்பு மனுக்கள் வரும் 19-ஆம் தேதி பெறப்படுகிறது. 20-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கும். அன்றே யார் அதிபர் என்பது தெரிந்துவிடும்.

இலங்கை அரசியல் வரலாற்றில் அதிபர் பதவியில் இருந்து விலகி அதன் பிறகு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வாக்கெடுப்பில் போட்டி இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. தற்போது அதிபரின் பொறுப்புகளை தற்காலிகமாக மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆளுங்கட்சியான இலங்கை பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த டலஸ் அழகம்பெரும உள்ளிட்ட பலர் இதில் போட்டியிடுவார்கள் என்பது தெரியவருகிறது.

இலங்கை அரசியல் சட்டப்படி இடைக்காலத்தில் புதிதாகத் தேர்வு செய்யப்படும் அதிபர், முந்தைய அதிபரின் பதவிக் காலத்தை நிரப்பும் வகையிலேயே செயல்படப் போகிறார். அதனால் முழு பதவிக் காலமும் புதிய அதிபருக்குக் கிடைக்காது.

அதிபர் பதவி காலியானது முதல் ஒரு மாதத்துக்குள்ளாக புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று இலங்கை அரசியல் சட்டம் கூறுகிறது. இந்த நடைமுறைகள்தான் இப்போது தொடங்கியிருக்கின்றன.

அதிபர் தேர்வுக்கான வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?

அறிவிக்கப்பட்டபடி வரும் 20-ஆம் தேதி நாடாளுமன்றம் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் வாக்குப்பெட்டி வைக்கப்படும். பின்னர் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் அழைத்து அவர்களுக்கு நாடாளுமன்ற தலைமைச் செயலாளர் வாக்குச் சீட்டு ஒன்றை அளிப்பார். இதில் வேட்பாளர்கள் பெயர்களும் அவற்றுக்கு எதிரே கட்டங்களும் இருக்கும்.

இந்த வாக்கெடுப்பு விருப்ப வாக்கு முறையில் (Preferential voting) நடக்கும். அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் அதிபர் பதவிக்குப் போட்டியிடும்போது ஒவ்வொருக்கும் ஒன்று முதல் எண்கள் முறையில் வரிசைப்படுத்தி விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் எந்த வேட்பாளர் அதிபராக வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவரது பெயருக்கு நேரே உள்ள கட்டத்தில் ஒன்று எனக் குறிப்பிட வேண்டும். இதேபோல அடுத்தடுத்த விருப்பங்களை இரண்டு, மூன்று என வரிசைப்படுத்த வேண்டும்.

ராமசாமி, குப்புசாமி என இருவர் போட்டியிடுகிறார்கள் என்றால் ராமசாமிக்கு 1 என்றும் குப்புசாமிக்கு 2 என்றும் தனது விருப்பத்தேர்வை அளிக்கலாம். இதற்கு என்னவென்றால், ராமசாமி தனது முதல் விருப்பம் என்றும் குப்புசாமி இரண்டாவது விருப்பம் என்பதும் இதற்குப் பொருள்.

வாக்குப் பதிவு முடிந்த பிறகு ஒன்று என்ற விருப்பத் தேர்வின் அடிப்படையில் வாக்குகள் எண்ணப்படும். 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால் அவரே அதிபராகத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.

மாறாக யாருக்கும் 50 சதவிகித வாக்குகள் கிடைக்க வில்லை என்றால், குறைந்த எண்ணிக்கையில் வாக்குகளைப் பெற்றவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார். அவரது வாக்குகளில் இரண்டாவது விருப்பத் தேர்வு யாருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் அந்த வாக்குகள் மற்றவர்களுக்குப் பிரித்து அளிக்கப்படும்.

அதனால் ஒரே ஒரு முறை அளிக்கப்பட்ட வாக்குகள் அடுத்தடுத்த சுற்றுகளாக எண்ணப்படும்.

எப்போது குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார்?

விருப்பத் தேர்வு முறையின் இறுதியில் வாக்குகள் எண்ணப்படும்போது 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

அப்படி யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றவர் அதிபராகத் தேர்வு செய்யப்படுவார்.

ஒருவேளை வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டும அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஒரே எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைத்து சமநிலை ஏற்பட்டால் குலுக்கல் முறையில் அதிபர் தேர்வு செய்யப்படுவார். அதாவது சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு அதிலிருந்து ஒருவரை அதிபராகத் தேர்வு செய்யும் நிலை ஏற்படும்.

“இதுவரை இலங்கை வரலாற்றில் யாரும் குலுக்கல் முறையில் அதிபராகத் தேர்வு செய்யப்படவில்லை. இந்த முறையும் அப்படி நடப்பதற்கான வாய்ப்புக் குறைவுதான்” என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் நாள்தோறும் புதிய திருப்பங்களைக் காண்டும் இலங்கை அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுவும் பல முனைப் போட்டியாக அதிபர் தேர்தல் மாறும் சூழலில் இது நடக்கவே நடக்காது என்று உறுதியாகக் கூற முடியாது.

அப்படியொரு சூழல் ஏற்படக்கூடும் என்றுதான் இலங்கையின் அரசியல் சட்டமே குலுக்கல் முறையில் அதிபர் தேர்ந்தெடுக்கும் முறையை வரையறுத்திருக்கிறது.

140க்கும் அதிகமான வாக்குகளைப் பெறுவார் !!

அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர் – த.சித்தார்த்தன்!!

கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!! (படங்கள்)

ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம் !!

ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன !!

அனுர குமாரவும் அதிரடி தீர்மானம் !!

இலங்கைக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் – கோட்டாபய ராஜபக்ஷ!!

ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு ! பலர் போட்டியிட்டால் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு!!

சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!!

ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? (படங்கள்)

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? (படங்கள்)

தினேஷ் குணவர்தன பதில் பிரதமராகவேண்டும் – ஜயகொடி !!

புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக சஜித் அறிவிப்பு!!

இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)

ஜனாதிபதியாக களம் இறங்கும் டலஸ்!!

ரணிலுக்கு மொட்டு ஆதரவு !!

“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? (படங்கள்)

ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை!!

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!

கோட்டாபயவின் வருகையும் வெளியேற்றமும்!!

இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? ‘வைரல் போட்டோ’ போராட்டக்காரர் கூறுவது என்ன? (படங்கள்)

கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!

ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கை!!

பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும்- சபாநாயகர்!!

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி – சபாநாயகர் !!

பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவி பிரமாணம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமருக்கான அறிவிப்பு இன்று !!

ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை – அனுர!!

பதவி விலகல் கடிதம் போலியானது – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !!

நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் – மத்திய வங்கியின் ஆளுநர்!!

கையொப்பமிட்ட கடிதத்துக்காக காத்திருக்கும் சபாநாயகர் !!

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் பரிந்துரை!!

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்! இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து!!

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது – வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை!!

சிங்கப்பூரில் கோட்டாபய அடைக்கலம் கோரவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு!!

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய!

நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும் குடிமக்கள்!! (படங்கள்)

கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!

விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை!!

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா அறிவிப்பு!!

புலிகள் இயக்கத்தை போல போராட்டக்காரர்களை இரண்டாக பிரித்து மோதவிடும் ரணிலின் சதி-எச்சரிக்கும் குரல்கள்!!

தடைப்பட்ட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம்!!

இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு செல்வது ஏன்? அவரை பதவி விலக்கு செய்ய சபாநாயகரால் முடியுமா? (படங்கள்)

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)

நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!

துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!

சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!

முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!

மீண்டும் ஊரடங்கு !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!

இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!

தரையிறங்கியது தனியார் ஜெட் விமானம் !!

மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!

கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய!!

ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!

துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!!

கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – மஹிந்த யாப்பா!!

இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிவிப்பு !!

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்: ஜுலி சங் !!

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா!!

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து! மகாநாயக்க தேரர்கள்!!

ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும் – ரணில்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? (படங்கள்)

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி !!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம்; ’ரணிலின் கேம்’ !!

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.