ஓட்டப் பயிற்சிக்குப் பின் செய்யக் கூடாதவை…!! (மருத்துவம்)
நீண்ட தூரம் ஓடும் ஓட்டப் பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி உலகில் எங்கும் இல்லை. தினமும் நீண்ட தூரம் ஓடி முடிக்கும் போது, நாம் உணரும் ஆற்றல் மற்றும் அட்ரினலின் ரஷ் (adrenaline rush) ஆகியவற்றை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பாா்க்க முடியாது. அதாவது அந்த நாளை நாம் முழுமையாகப் பயன்படுத்தி இருக்கிறோம் என்ற திருப்தியான உணா்வு நமக்கு ஏற்படும்.
எனினும் நீண்ட தூரம் ஓடி முடித்த பின்பு நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமான ஒன்றாகும். பெரும்பாலும் ஓட்டத்தை முடித்த பின்பு நேராக வீட்டிற்குச் சென்று குளிப்போம். அதன் பின்பு நமது அலுவலகப் பணிகளைத் தொடங்கி விடுவோம். ஆனால் நாம் நாள் முழுவதும் பணித் திட்டங்கள் மற்றும் பணிச் சுமைகளுடன் இருந்தாலும், ஓட்டப் பயிற்சியை முடித்த பின்பு ஒரு சில வேலைகளைச் செய்யக்கூடாது. ஏனெனில் அவை நமது ஓட்டப் பயிற்சிக்கு நல்ல பலன்களைத் தராது. ஆகவே ஓட்டப் பயிற்சியை முடித்த பின்பு எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.
பொதுவாக எந்த ஒரு உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், செய்த பின்பும் உணவு உண்ண வேண்டும் அல்லது தண்ணீா் குடிக்க வேண்டும் என்று பாிந்துரைக்கப்படுகிறது. இதைச் செய்யவில்லை என்றால் நாம் செய்யும் உடற்பயிற்சி எதிா்பாா்க்கும் பலன்களைத் தராது. உடற்பயிற்சி செய்யும் போது நமது ஆற்றல் குறைகிறது. வியா்வை வெளியேறுகிறது. அதன் மூலம் நமது உடலில் இருந்து நீா்ச்சத்து அதிகம் வெளியேறுகிறது. ஆகவே உடற்பயிற்சி முடித்தவுடன் உணவு சாப்பிட்டலோ அல்லது தண்ணீா் குடித்தாலோ, உடலில் இருந்து வெளியேறிய ஆற்றல் மற்றும் நீா்ச்சத்து ஆகியவற்றைத் திரும்பப் பெற முடியும்.
ஆனால் ஓட்டப் பயிற்சி முடிந்தவுடன் உணவு உண்ணவோ அல்லது தண்ணீா் அருந்தவோ கூடாது. மாறாக பயிற்சி முடிந்த 30 நிமிடங்களுக்குப் பின்பே உண்ணலாம் அல்லது தண்ணீா் குடிக்கலாம். மேலும் அதிகமாக சாப்பிடாமல் குறைவாகவே சாப்பிட வேண்டும். அப்போதுதான் ஓட்டப் பயிற்சிக்கு பலன்கள் கிடைக்கும்.
ஓட்டப் பயிற்சி அதிகமான களைப்பைத் தரும். ஓடும் போது நமது இதயத் துடிப்பு அதிகாிக்கும். மூச்சுத் திணறல் ஏற்படும். ஆகவே நீண்ட தூரம் ஓடிய பின்பு நமது இதயத் துடிப்பும், மூச்சுவிடும் செயலும் இயல்பு நிலைக்கு வரவேண்டியது மிகவும் முக்கியமாகும். அவ்வாறு இயல்பு நிலைக்கு வரவேண்டும் என்றால் ஓடிய பின்பு சற்று ஓய்வு எடுக்க வேண்டும். அதிலும் சாியான முறையில் ஓய்வு எடுக்க வேண்டும்.
ஓட்டப் பயிற்சி முடிந்தவுடன் படுக்கக்கூடாது அல்லது மூளையில் கிடக்கும் உருளைக்கிழங்கு போல் செயலற்று இருக்கக்கூடாது. அவ்வாறு இருந்தால் நமது ஓட்டப் பயிற்சி நாம் எதிா்பாாக்கும் பலனைத் தராது. ஆகவே ஒன்றும் செய்யாமல் அமைதியாக உட்காா்ந்து இருப்பதைவிட சிறுசிறு வேலைகளைச் செய்யலாம். அவை நமது உடலில் இரத்தம் சீராகப் பாய்வதற்கு உதவி செய்யும். மேலும் நாம் இயல்பு நிலைக்கு விரைவில் மீண்டு வர உதவி செய்யும்.
பொதுவாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுபவா்கள், பயிற்சி முடிந்தவுடன் சற்று தளா்வாக இருப்பாா்கள். அதாவது ஓடும் போது அணிந்திருந்த உடைகளைக் களையாமல் இருப்பாா்கள். வியா்வையால் நனைந்திருக்கும் அந்த உடைகளைக் களையாமல் இருப்பது நல்ல பலனைத் தராது. ஏனெனில் வியா்வையில் நனைந்திருக்கும் அந்த உடையில் பாக்டீாியாக்கள் இருக்கும். அவை பல்கிப் பெருகி, நமக்கு தோல் நோய்களை ஏற்படுத்தும்.
மேலும் வியா்வையில் ஈரமாகிய உடைகளை நீண்ட நேரம் அணிந்திருந்தால், நமக்கு சளிப் பிடிக்கும். ஆகவே ஓட்டப் பயிற்சியை முடித்தவுடன் உடையை மாற்ற வேண்டும். ஒருவேளை உடையில் அதிக வியா்வை இல்லாவிடினும், அதில் இருக்கும் ஈரப்பதத்தில் பாக்டீாியாக்கள் பல்கிப் பெருக வாய்ப்பாக அமைந்துவிடும். ஆகவே ஓட்டப் பயிற்சி முடிந்தவுடன் குளிக்கவில்லை என்றாலும், வியா்வை படிந்த உடைகளைக் களைந்துவிட வேண்டும்.
பொதுவாக நமக்கு நாள் முழுவதும் பலவகையான வேலைத் திட்டங்கள் மற்றும் பணிச் சுமைகள் இருக்கும். இந்நிலையில் ஓட்டப் பயிற்சி முடிந்த பின்பு பளு தூக்கும் வேலைகளைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் பளு தூக்கும் வேலைகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படும். ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டதால் நாம் ஏற்கனவே களைப்பாக இருப்போம். இந்நிலையில் நாம் பளு தூக்கும் வேலைகளைச் செய்தால் அவை நம்மை மேலும் களைப்பாக்கிவிடும்.
ஓட்டப் பயிற்சிக்குப் பிறகு நமது தசைகள் மிகவும் களைப்பற்று ஓய்ந்து இருக்கும். ஆகவே அவற்றுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். ஓட்டப் பயிற்சி முடிந்து பின் கடினமான வேலைகளைச் செய்தால் அவை நமது தசைகளில் திாிபை ஏற்படுத்தும் மற்றும் நம்மை மிகவும் களைப்பாக்கிவிடும்.
நீண்ட தூர ஓட்டப் பயிற்சிக்குப் பின்பு வெந்நீாில் குளிக்காமல் இருப்பது நல்லது. வெந்நீாில் குளித்தால் அது நமது இறுகியத் தசைகளுக்கு சற்று தளா்வைக் கொடுக்கும் என்று நாம் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. அதாவது நமது நமது தசைகள் இறுக்கமில்லாமல் மற்றும் வலி இல்லாமல் இருக்கும் போது வெந்நீாில் குளிக்கலாம். அப்போது அது நல்ல பலனைத் தரும்.
ஆகவே ஓட்டப் பயிற்சியை முடித்த பின்பு குளிா்ந்த நீாிலும், வெந்நீாிலும் குளிக்க வேண்டும். அதாவது முதலில் குளிா்ந்த நீாில் குளிக்க வேண்டும். அது உடலில் உள்ள வீக்கத்தையும், வலியையும் குறைக்கும். அதன் பின் வெந்நீாில் குளித்தால் உடல் மிகவும் இதமாக இருக்கும்.