நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள் வழங்கப்படுகின்றமைக்கு பலரும் பாராட்டு!! (வீடியோ)
நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள் வழங்கப்படுகின்றமைக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்
கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு முதல்கட்டமாக இன்றைய தினம் நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எவ்வித குழப்பங்களுமின்றி எரிபொருட்கள் வழங்கப்படுகின்றமைக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்,
அத்துடன் எரிபொருள் பிரச்சனை தலைதூக்கிய காலப் பகுதியில் இருந்து நுணாவில் IOCஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் எந்த வித குழப்பங்களும் இன்றி சகலருக்கும்சமனாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதாகவும் இந்த விடயம் பாராட்டப்படக் கூடியது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்
வியாழன் வெள்ளி சனி ஆகிய கிழமை நாட்களில் குறித்த கிராம சேவகர் பிரிவுகளுக்கே நுணாவில் IOC எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் வழங்கப்படும்.
நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றார்கள் அந்தவகையில் அனைத்து மக்களுக்கும் எரிபொருள் கிடைக்கும் வண்ணம் புதிய எரிபொருள் அட்டை நடைமுறையின்படி பின்வரும் நடைமுறையின் கீழ் மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படுமென நுணாவில் IOC எரிபொருள் நிரப்ப நிலைய உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசன் தெரிவிப்பு.
கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை உள்ளவர்களுக்கு நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வருகின்ற வியாழன், வெள்ளி மற்றும் சனி
கிழமைகளில் கீழ் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படும் என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
வருகின்ற வியாழக்கிழமை
J-301
J-302
J-303
J-304
J-305
J-306
J-307
கிராம சேவகர் பிரிவிற்கும்
வருகின்ற வெள்ளிக்கிழமை
J-308
J-309
J-310
J-311
J-312
J-313
J-314
கிராமசேவையாளர் பிரிவிற்கும்
வருகின்ற சனிக்கிழமை
J-340
J-341
J-342
J-343
J-344
J-345
J-346
J-347
கிராமசேவையாளர் பிரிவிற்கும்
எரிபொருள் வழங்கப்படுமென தெரிவித்தார்.
அத்துடன் மேல் காணப்படும் கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் எரிபொருள் அட்டை பெற்றுக் கொள்ளாது இருந்தால் உங்கள் கிராமசேவகரை தொடர்புகொண்டு எரிபொருள் அட்டையினை பெற்றுக்கொள்ளுங்கள் எனவும்.
ஏற்கெனவே மேல் காணப்படும் கிராமசேவகர் பிரிவில் எரிபொருள் அட்டையினை பெற்று எரிபொருளினை பெற்றுக்கொண்டவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.
மேலும் ஏனைய கிராமசேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட மக்களுக்கு அடுத்து வரும் கிழமை நாட்களில் படிப்படியாக எரிபொருட்கள் வழங்கப்படுமென தெரிவித்ததுடன.
கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டையை கொண்டுவருபவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமெனவும் அட்டை கொண்டு வராதவர்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது எனவும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”