வரிசையில் நிற்காதீர்: 21 முதல் எரிபொருள் !!
தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டின் அடிப்படையில் எதிர்வரும் வியாழக்கிழமை (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ, இன்று (18) தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நிற்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வியாழக்கிழமை முதல், கியூஆர் குறியீடு மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மட்டுமே எரிபொருள் விநியோகிப்படும் என்று தெரிவித்த அவர், தற்போது வரிசையில் நிற்கும் மக்களை வரிசைகளில் இருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொண்டார்.
அதற்கமைய வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கமான 0, 1 மற்றும் 2 ஆகிய இலக்கங்களைக் கொண்ட வாகன உரிமையாளர்கள் மாத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0, 1, 2 இலக்கங்களுக்கு திங்கள், வியாழன் ஆகிய நாட்களும், 3, 4, 5 ஆகிய இறுதி இலக்கங்களுக்கு செவ்வாய், வெள்ளிகிழமைகளும் 6, 7, 8, 9 ஆகிய இறுதி இலக்கங்களுக்கு புதன், சனி, ஞாயிறு ஆகிய தினங்களும் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.