மத்தியபிரதேசத்தில் பலத்த மழை: வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கார்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் கனமழைக்கு இடையே பாலத்தை கடக்கும்போது நீரினால் கார் சிக்கியது. பின்னர் காரில் இருந்தவர்கள் வெளியே வந்து ஜீப்பை பாதுகாப்பாக இழுக்க முயன்றனர். கயிறு மூலம் இழுக்க முயன்றும் பலனில்லை. இறுதியில் கார் பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் உள்ள மஹித்பூர் தாலுகாவில் உள்ள நாராயண பலோடா கால் கிராமத்தில் நடந்துள்ளது. வாகனங்களில் பயணம் செய்த அனைவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். சம்பவத்தின் வீடியோவில் ஜீப் பலத்த நீரோட்டத்தில் சிக்கி பாலத்தில் இருந்து அடித்துச் செல்லப்பட்டதைக் காட்டுகிறது.இந்த ஆண்டு உஜ்ஜயினியில் 300 மிமீ மழை பெய்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த வாரம், நாக்பூரின் சவ்னர் தாலுகாவில் பலத்த மழைக்கு மத்தியில் பாலத்தை கடக்கும் போது கார் நீரில் மூழ்கியதில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.