;
Athirady Tamil News

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் போது தமிழ் பேசும் கட்சிகள் மக்களின் அபிலாசைக்கு இடம் கொடுக்க வேண்டும்!! (வீடியோ)

0

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து எமது நாட்டின் பொருளாதார பிரச்சினை மற்றும் நாட்டு மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது தார்மீக பொறுப்பாகும் என சர்வதேச இந்துமத குருபீடாதிபதி ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட குருபீட காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாகவும் நாட்டின் ஜனாதிபதி பதவி விலகியதன் காரணமாகவும் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடியதாகவும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய வகையிலும் ஒரு சிறந்த ஜனாதிபதியை தெரிவு செய்யக்கூடிய பொறுப்பு தமிழ் பேசும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.இச்சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும் கட்சிகள் கட்சி பேதங்களை மறந்து முஸ்லீம் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஜனாதிபதியை தெரிவு செய்யக்கூடிய தார்மீக பொறுப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது என்பதை தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.