ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் – மத்திய அரசு தகவல்..!!
நாடாளுமன்றத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி.கே.சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், ஏர் இந்தியா மீது 3 மாதங்களில் சுமார் 1,000 புகார்கள் வந்துள்ளதாக தெரிவித்தார். இந்த புகார்கள் அனைத்தும் பயணிகள் கட்டணத்தைத் திரும்பப் பெறுதல், விமானங்களை முன்பதிவு செய்தல் மற்றும் ஊழியர்களின் நடத்தை போன்ற பல்வேறு காரணங்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டது. ஏர் இந்தியாவின் உரிமையை டாடா குழுமம் இந்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. ஜூன் 14ஆம் தேதி, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்திருந்தது. உரிய டிக்கெட்டுகள் இருந்தும் பயணிகளை ஏற அனுமதிக்காததற்கும், உரிய இழப்பீடு வழங்காததற்கும் ஏர் இந்தியாவுக்கு அபராதம் விதித்தது குறிப்பிட்டத்தக்கது.