;
Athirady Tamil News

மலேசியாவில் பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்வு..!!

0

மலேசியாவின் கெடா மாநிலத்தில் சட்டசபை கூட்ட தொடரில் முதல்-மந்திரி முகமது சனூசி முகமது நூர் தாக்கல் செய்த திருமணம் தொடர்புடைய திருத்த சட்டமசோதா ஒன்று அவையில் உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இதன்படி, முஸ்லிம் பெண்களின் சட்டப்பூர்வ வயது 16ல் இருந்து 18 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. திருமணத்திற்கு முன்பு அவர்கள் குறைந்தபட்ச பக்குவம் பெற்ற வயதினை அடைவார்கள் என்பது உறுதி செய்யப்படுவதற்காக இந்த வயது உயர்வு முடிவு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த குறைந்தபட்ச வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொள்ள அனுமதி கோருபவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், அவர்கள் இஸ்லாமிய கோர்ட்டிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். இதேபோன்று கோர்ட்டு ஒப்புதல் இன்றி ஒன்றுக்கு மேற்பட்ட துணையை திருமணம் செய்து கொள்பவர்களுக்கான அபராத தொகையை 3 ஆயிரம் ரிங்கிட் ஆக உயர்த்துவதற்கான, மசோதாவும் திருத்தம் செய்து சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. பெண்களின் குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும் என வாதிடும் மலேசிய வழக்கறிஞர்கள், அதற்கு குறைவான வயதில் நடக்கும் திருமணங்களால், பெண்களின் வாய்ப்புகள் பறிபோவதுடன், சுகாதார விசயங்களிலும் அவர்கள் பாதிக்கப்பட கூடும் என கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.