இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் இயந்திர தொகுதி வழங்கி வைப்பு!! (படங்கள்)
இயற்கை பசளை உற்பத்தியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் பெரன்டினா நிறுவனத்தால் கல்முனையில் இயந்திர தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றிருந்ததுடன் பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் கலந்து கொண்டிருந்தார்.
மூன்று இலட்சம் பெறுமதியான குறித்த இயந்திர தொகுதியின் மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற இயற்கை பசளையினை சந்தைப்படுத்தும் செயற்பாட்டினையும் குறித்த நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விவசாய பாடவிதான அலுவலகர் எம்.எஸ்.எம் ஜெனித்கான் நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் பி.பிரதிலிபன் ,வியாபார அவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஜெயரூபன் இ உட்பட பலர் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”