டலஸை ஆதரிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாட்டைப் பெற்றது கூட்டமைப்பு!! (வீடியோ)
புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருமவுக்கு இன்றைதினம் ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அகழப்பெரும மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடமிருந்து எழுத்துமூலமான ஆவணம் பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருவை ஆதரிப்பதற்காக நிபந்தனைகளை விதித்து எழுத்துமூலமான ஆவணத்தினைப் பெற்றுக்கொண்டதா இல்லையா என்பது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
‘புதிய இடைக்கால ஜனாதிபதி டலஸ் அகழப்பெருமவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதான முடிவினை எடுத்துள்ளோம்’ என்று அதன் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி அறிவித்திருந்தார்.
எனினும், எழுத்துமூலமான உடன்பாடு பெறப்பட்டதா என்பது தொடர்பில் வினவியபோது, ‘தற்போதைக்கு தன்னால் பதிலளிக்க முடியாது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் டலஸ் அழகப்பெரும மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் கூட்டமைப்பு எழுத்துமூலமான உறுதிப்பாட்டை வழங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, சுமந்திரன், குறித்த செய்தியை நிரகாரித்துள்ளதோடு, அச்செய்தி டலஸ் அழகப்பெருமவின் வெற்றியை பாதிக்கும் வகையில் திட்டமிடப்பட்டது என்றும் தனத டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வீரகேசரி, குறித்த கூட்டத்தில் பங்கேற்ற ஏனைய உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு உரையாடிய நிலையில் ஏழு உறுப்பினர்கள் ‘தமிழ் மக்களின் உடனடியான மற்றும் நீண்டகாலப் பிரச்சினைகளை உள்ளடக்கிய பத்து பிரதான மற்றும் நான்கு துணை விடயங்களை மையப்படுத்தி எழுத்துமூலமான உறுதிப்பாடு அளிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ‘குறித்த ஆவணம் சஜித் மற்றும் டலஸ் அகழப்பெருமவினால் சம்பந்தனிடத்தில் கையளிக்கப்பட்டதோடு சம்பந்தன் அந்த ஆவணத்தினை சுமந்திரனிடத்தில் ஒப்படைத்தார்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறித்த ஏழு உறுப்பினர்களும், ‘புதிய இடைக்கால ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது தாம் நடுநிலை வகிக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். எனினும் சஜித், டலஸ் நேரில் வருகை தந்து உறுதிப்பாட்டை வழங்கியமையால் அவர்களை ஆதரிக்கும் தீர்மானத்திற்கு இணங்கினோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம், இச்செய்தி பிரசுரிப்பதற்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை தொடர்பு கொள்வதற்கு முனைந்திருந்தபோதும் அந்த முயற்சி வெற்றியளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”
வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம்!!
எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை – சம்பந்தனின் இல்லத்திற்கு விரையும் டலஸ், சஜித்!!
இலங்கை நெருக்கடி: ‘மத அரசியல்’ விளைவித்த துன்பங்கள் – வரலாறு மாற்றியமைக்கப்படுமா?
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!
பெட்ரோல் விலை குறைப்பு.. விவசாய கடன் ரத்து.. இலங்கையில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்பு!
புதிய கட்சியை ஆரம்பிக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!!
இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன?
இலங்கை நெருக்கடி: “கடனில்லாத நாடு வேண்டும்” – 100வது நாள் போராட்டத்தில் மக்கள்!! (படங்கள்)
மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு புதிய வீடுகள் – பதில் ஜனாதிபதி!!
15 நாட்களுக்குள் வெளியேறவும்- கோட்டாவுக்கு சிங்கப்பூர் அரசு கோரிக்கை!!
அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர் – த.சித்தார்த்தன்!!
கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!! (படங்கள்)
ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன !!
ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? (படங்கள்)
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? (படங்கள்)
புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம்!!
இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)
“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? (படங்கள்)
ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை!!
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!
இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)
கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!
ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கை!!
பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும்- சபாநாயகர்!!
ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை – அனுர!!
பதவி விலகல் கடிதம் போலியானது – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !!
நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் – மத்திய வங்கியின் ஆளுநர்!!
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்! இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து!!
கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது – வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை!!
சிங்கப்பூரில் கோட்டாபய அடைக்கலம் கோரவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு!!
நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும் குடிமக்கள்!! (படங்கள்)
கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!
மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)
இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!
கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)
நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!
துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!
இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!
மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!
கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!