இலங்கை ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டது ஏன்? (வீடியோ)
கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.
புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தலையீடுகளை செய்து வருவதாக சில தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு சார்பாக செயற்படுகின்றமை, இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கை ஜனாதிபதி வாக்கெடுப்புக்கு தலையீடு செய்கின்றமைக்கு காரணம் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கிறார்.
இலங்கையில் உரப் பிரச்சினை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவிடம் உதவிகளை நாடிய போது, டளஸ் அழகபெரும, விமல் வீரவங்க, உதய கம்மன்பில உள்ளிட்ட தரப்பினர் ரஷ்யா மற்றும் சீனாவிடம் செல்ல வேண்டும் என வலியுறுத்தியிருந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
இதனால், ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவதற்கு இந்தியா விரும்பி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
”இந்தியா ரணிலையே விரும்புகின்றனது. ஏனென்றால், டளஸ் அழகபெரும பக்கத்தில் உள்ள விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் சீனா, ரஷ்யா சார்பானவர்கள் என்பதை பகிரங்கமாகவே அறிவித்தவர்கள். வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களும் சீனா, ரஷ்யா சார்ந்தவர்கள். இதனால், அவர்களின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து விடும் என இந்தியா பயப்படுகின்றது. இந்தியா அரசியல் ரீதியிலான அழுத்தங்களை கொடுக்கா விட்டாலும், அழுத்தங்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கின்றது” என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த தருணத்தில், இந்தியா இலங்கைக்கு உடனடி கடனுதவிகளை வழங்கியிருந்தது.
இதனால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட இலங்கை, சற்றேனும் தலை நிமிர இந்தியா பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில், இந்தியாவிடம் தொடர்ந்தும் கடனை பெற்றுக்கொள்ளாது, எரிபொருளுக்கான ரஷ்யாவிடம் செல்வோம் என டளஸ் அழகபெரும, சார்ந்தவர்கள் தெரிவித்திருந்ததாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா கூறுகின்றார்.
”இந்தியாவிடம் தொடர்ந்தும் கடனை வாங்காமல், நாங்கள் எரிபொருளுக்காக ரஷ்யாவிடம் போவோம். ரஷ்யா இருக்கும் போது, ஏன் நீங்கள் இந்தியாவிடம் செல்ல வேண்டும் என அவர்கள் கூறினார்கள். உர பிரச்சினை வரும் போது, சீனாவிடம் போவோம். ரஷ்யாவிடமிருந்து எடுப்போம். சீனா, ரஷ்யா எங்களுடன் நல்ல நாடுகள் என சொன்னார்கள். ஆனாலும், கோட்டாபய ராஜபக்ஸ அந்த சந்தர்ப்பத்தில் யாரையும் ரஷ்யாவிற்கு அனுப்பவில்லை.
அப்படி அனுப்பினால், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கோபித்துக்கொள்ளும் என கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தெரியும். சீனாவுடன் நெருக்கமாக பழகுபவர் தான் டளஸ் அழகபெரும. அதனால், விரும்பியோ விரும்பாமலோ, இலங்கைக்கு ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை கொடுக்க வேண்டிய இடத்தில் இந்தியா உள்ளது. விரும்பியோ விரும்பாமலோ ரணிலை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவிற்கு ஏற்பட்டமைக்கு காரணம் இதுவே.” என அவர் குறிப்பிடுகின்றார்.
டளஸ் அழகபெருமவின் அரசியல் வாழ்க்கைக்கு பின்னால், ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் இருப்பதாவே பலரும் கூறி வருவதாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் நடத்தப்படும் வாக்கெடுப்பு குறித்து, ராஜதந்திர ரீதியில் பல நாடுகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி, பல தரப்பிற்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)
வாக்களிப்பு நிலையத்திற்கு கையடக்க தொலைபேசிகளை கொண்டு வர வேண்டாம்!!
எழுத்துமூல உறுதிப்பாடு தேவை ; கூட்டமைப்பு நிபந்தனை – சம்பந்தனின் இல்லத்திற்கு விரையும் டலஸ், சஜித்!!
இலங்கை நெருக்கடி: ‘மத அரசியல்’ விளைவித்த துன்பங்கள் – வரலாறு மாற்றியமைக்கப்படுமா?
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் தொடர்பில் சபாநாயகர் பொலிஸில் முறைப்பாடு!!
பெட்ரோல் விலை குறைப்பு.. விவசாய கடன் ரத்து.. இலங்கையில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்பு!
புதிய கட்சியை ஆரம்பிக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!!
இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன?
இலங்கை நெருக்கடி: “கடனில்லாத நாடு வேண்டும்” – 100வது நாள் போராட்டத்தில் மக்கள்!! (படங்கள்)
மொட்டுக் கட்சி எம்.பிக்களுக்கு புதிய வீடுகள் – பதில் ஜனாதிபதி!!
15 நாட்களுக்குள் வெளியேறவும்- கோட்டாவுக்கு சிங்கப்பூர் அரசு கோரிக்கை!!
அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர் – த.சித்தார்த்தன்!!
கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!! (படங்கள்)
ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன !!
ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? (படங்கள்)
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை? (படங்கள்)
புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம்!!
இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)
“கொடியும் வேண்டாம், அதிமேதகு என அழைக்கவும் வேண்டாம்” – ரணில்!!
இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? (படங்கள்)
ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி ஒருவரை தேர்ந்தெடுக்கும் முறை!!
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய வேண்டும் – சர்வதேச மன்னிப்புச்சபை!!
இலங்கை பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு!! (படங்கள்)
கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!
ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கை!!
பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும்- சபாநாயகர்!!
ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை – அனுர!!
பதவி விலகல் கடிதம் போலியானது – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !!
நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் – மத்திய வங்கியின் ஆளுநர்!!
கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்! இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து!!
கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது – வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை!!
சிங்கப்பூரில் கோட்டாபய அடைக்கலம் கோரவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு!!
நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும் குடிமக்கள்!! (படங்கள்)
கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!
மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)
இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!
கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)
நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!
துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!
இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!
மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!
கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!