திருப்பதியில் தரிசனத்திற்கு வந்த இடத்தில் தலையில் கல்லை போட்டு ஆரணி பக்தர் கொலை..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக சென்றார். தரிசனம் முடித்து வெளியே வந்த சரவணன் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள மியூசியம் அருகே அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது குடியாத்தம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் சரவணனிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது சரவணனுக்கும் பாஸ்கருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த பாஸ்கர் அருகில் இருந்த கல்லை எடுத்து சரவணன் தலைமீது போட்டார். இதில் தலைநசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார். பாஸ்கர் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து திருமலையில் மறைந்து இருந்த பாஸ்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பதியில் பக்தர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.