சோனியாவிடம் விசாரணை- பாராளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சிகள் அமளி..!!
விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளை கடந்த 3 தினங்களாக முடக்கி இருந்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற மக்களவையில் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் இன்று 11.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. அதோடு காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்சபையில் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.