இலங்கையின் புதிய பிரதமராகும் தினேஷ் குணவர்தன? யார் இவர்.. இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்பாரா!!
இலங்கையின் அடுத்த பிரதமராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டே நிலைமை கையை மீறிப் போகும் எனக் கூறப்பட்டது.
இருப்பினும், கடந்த ஆண்டு நிலைமையைச் சமாளித்துவிட்டனர். இந்த ஆண்டு நிலைமையைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை..
நெருக்கடி
இந்த ஆண்டு தொடக்கம் முதலே இலங்கையின் நிலைக் கையைவிட்டுப் போகத் தொடங்கியது. எரிபொருள், மின்சாரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் இலங்கையில் பல பகுதிகளில் பல மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. தொடரும் மின்வெட்டால் இலங்கையின் தொழிற்துறை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட அங்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ராஜினாமா
இதனால் மக்கள் சொல்லில் அடங்காத இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி அங்கு அரசியல் நெருக்கடிக்கும் வழிவகுத்து உள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாகவே இலங்கை மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதலில் இலங்கை நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அவரால் நிலைமையைச் சரி செய்ய முடியவில்லை.
அதிபரான ரணில் விக்ரமசிங்க
இதனால் மக்கள் போராட்டம் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. இதையடுத்து வேறுவழியின்றி இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச ராஜினாமா செய்து, வெளிநாட்டிற்கும் தப்பி ஓடி உள்ளார். பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் இக்கட்டான சூழல் நிலவும் சூழலில், நிலைமையைச் சமாளிக்க புதிய அரசு விரைவில் அமைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து பொறுப்பு அதிபராக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.
புதிய பிரதமர்
இந்தச் சூழலில் இலங்கையின் புதிய குடியரசுத் தலைவராக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இலங்கை அரசின் புதிய அமைச்சரவை பொறுப்பு ஏற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் இப்போதுள்ள நிலைமையைச் சமாளிக்கும் பெரிய சவால் இந்த அரசுக்கு இருக்கும்.
யார் இந்த தினேஷ் குணவர்தன
இலங்கை அரசியல்வாதியான தினேஷ் குணவர்தன கடந்த 1983ஆம் ஆண்டு முதல்முறையாக இலங்கை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1994 தேர்தலில் அவர் தோல்வி அடைந்து இருந்த போதிலும், 2000 முதல் தொடர்ச்சியாக அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 73 வயதாகும் தினேஷ் குணவர்தன கடந்த காலங்களில் பல்வேறு துறைகளில் முக்கிய அமைச்சராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் : அமெரிக்க தூதுவர் கவலை!!
கோட்டா கோ கம இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்!! (படங்கள், வீடியோ)
சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே இலங்கையில் அழிவுக்கு காரணம் – அமெரிக்கா!!
நான் ராஜபக்சே சகோதரர்களின் கூட்டாளியா? யார் சொன்னது? பத்திரிகையாளர் கேள்விக்கு செம டென்ஷனான ரணில்!!
இலங்கையில் போராட்டம் போதும்… முடித்துக்கொள்ள வேண்டும்: மஹிந்த ராஜபக்ஷ!!
ஜனாதிபதிப் பதவியேற்கும் நிகழ்வில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதா?
ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் வெற்றிடம்!!
இலங்கையின் 8-வது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்பு- கொழும்பில் ஓயாத போராட்டம்!!
இலங்கை நெருக்கடி: ரணிலை விழிபிதுங்க வைக்கும் 6 தலை வலிகள் தாக்குப்பிடிப்பாரா? (படங்கள்)
8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்!!
திடீரென வாகனத்திலிருந்து இறங்கிய நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் !!
நான் புதிய ஜனாதிபதி என அறிவித்தமை எனக்கு மகிழ்ச்சி – ரணில் !!
தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிப்பினை மேற்கொண்டது.!! (வீடியோ, படங்கள்)