;
Athirady Tamil News

ஜனாதிபதி நியமித்த மூவரடங்கிய குழு!!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விசாரணை ஒன்றிற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தைசே நிறுவனத்திடம் இருந்து அமைச்சரவை அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கேட்டதாக சமூக ஊடகங்கள், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் அண்மையில் மேற்கொண்ட அறிவிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பக்கச்சார்ப்பற்ற விசாரணை ஒன்றை நடாத்துமாறு மேற்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையிலான இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.எம் விக்கிரமசிங்க, ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் சிறப்பு அதிகாரியான எஸ்.எம்.ஜீ.கே பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை அறிக்கையை ஜூலை மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தனக்கு கையளிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.