;
Athirady Tamil News

ரெயில்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை- மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தகவல்..!!

0

பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளதாவது: ரெயில்வே பாதுகாப்புப் படை, பயணிகளின் பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரெயில்வே மேற்கொண்டு வருகிறது. அதன்படி ரெயில்களில், ரயில்வே பாதுகாப்புப் படை காவல் துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில் பயணிகளுக்கான பாதுகாப்புத் தொடர்பான உதவி எண் 139, 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட ரெயில் பெட்டிகளில், ஆண் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் ரெயில்வே, பயணிகளுடன் தொடர்பில் உள்ளது. 5,882 ரெயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் சில ரெயில்களில் அடிப்படை மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரெயில் நிலையங்களை மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவற்றுடன் நவீனப்படுத்துவதும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஆன்லைன் மூலம்,பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் போதே உணவுக்கான ஆர்டரையும் வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு தரமான சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில், ரெயில் நிலையங்களில் குடிநீர் வழங்கும் தானியங்கி எந்திரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.